Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, December 13, 2024

ராஜராஜ சோழன்


  • தமிழக கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன்.

  • ராஜராஜ சோழன் சுந்தர சோழனுக்கும் வானவன்மாதேவிக்கும் மகனாக பிறந்தவர்.

  • ராஜராஜ சோழனின் 1037 வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த ஊரான தஞ்சாவூரில் இந்த வருடம் அக்டோபர் 27ஆம் நாள் கொண்டாடப்பட்டது.

  • ராஜ ராஜ சோழனுக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் உண்டு 

  1. ஜெயங்கொண்ட சோழன் 

  2. மும்முடிச் சோழன்

  3. அருள்மொழிவர்மன் 

  4. அருள்மொழி தேவன் 

  5. இராஜவிநோதன்,

  6. இரவிகுல மாணிக்கன், 

  7. இரவிவம்ச சிகாமணி,

  8.  இராஜ கண்டியன்,

  9.  இராஜ சர்வக்ஞன்,

  10.  இராஜராஜன், 

  11. இராஜகேசரிவர்மன், 

  12. உத்தமசோழன், 

  13. உத்துங்கதுங்கன், 

  14. உய்யகொண்டான்,

  15.  உலகளந்தான்

போன்ற அனைத்து விருது பெயர்களையும் தனது வெற்றியாலும் ஆட்சித்திறனாளும் பண்பு நலனாலும் பெற்றுள்ளார்.

  • ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் கட்டிய தஞ்சை பெரிய கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்தது. 

  • 1987 ஆம் ஆண்டு UNESCO வின் உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோயில் அறிவிக்கப்பட்டது. 

  • தஞ்சை பெரிய கோயிலுக்கு தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில் போன்ற பெயர்களும் உண்டு.

  • ராஜராஜ சோழன் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினார் என்பது மட்டுமல்ல தோல்வியே சந்திக்காத மாமன்னன் என்ற புகழையும் பெற்றவர்.

  • கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ராஜராஜ சோழனின் இளமைக்காலத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது.

  • தமிழர்கள் எண்ணி எண்ணி பெருமைப்பட ஆயிரம் உண்டு ஆனால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒரு தமிழனை பற்றி நாம் இன்றும் பெருமையோடு பேசுகிறோம் என்றால் அதுதான் நம் மாமன்னன் ராஜராஜ சோழன்.


                                                                    நன்றி!!!