வணக்கம்
அவ்வை தமிழ் பள்ளி, சட்டநூகா கிளையை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள். ஆசிரியர்களுக்குள் ஒற்றுமையாக தேவைப்படும்போது அனுசரித்து வகுப்பு எடுக்கிறீர்கள்.
பெற்றோர்கள் பலர் அவர்களாகவே முன்வந்து ஆசிரியர்களை என்னிடம் பாராட்டி சொன்னார்கள். நாம் எடுத்ததோ தோராயமாக 4 வாரங்கள் - 4 வகுப்புதான். உங்கள் அர்ப்பணிப்பான பணிக்கு வாழ்த்துக்கள்
வகுப்பு எண்ணிக்கை - தெளிவுக்காக :
WK01 18-Aug-23
WK02 25-Aug-23
WK02H 01-Sep-23- Holiday (we conducted for continuity)
WK03 08-Sep-23
WK04 15-Sep-23
முக்கியமான நாட்கள் :
WK08 13-Oct-23 Test -
நாம் ஒருநாள் தாமதமாக பள்ளி ஆரம்பித்ததால், (https://www.catamilacademy.org/AvvaiTamilPalli.html) நாட்காட்டி அட்டவணையில் இருந்து ஒருநாள் பின்தங்கி இருப்போம்.
பள்ளித் தகவல்கள்
4-ம் வகுப்பு - ஹேமா அவர்கள் ஆசிரியருக்கு ஆர்வம் இருப்பதாக அணுகினார்கள். நான்காம் வகுப்பு ஆசிரியை சாருலதா அலுவல் பணி அதிகம் இருப்பதால், உதவி கேட்டார்கள். ஹேமா அவர்கள் தமிழின் ஆழம், ஆர்வம் கருதி, சாருலதா வகுப்பிற்கு துணையாக சேர்த்துள்ளோம்.
ஹேமாவை பள்ளிக்கு அறிமுகப்படுத்திய சாவித்ரி ஆசிரியருக்கு நன்றி
பொதுத் தகவல்கள் (பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும் )
ஐயா நெல்லைக்கண்ணன் தமிழ்க்கடல் என அழைப்பார்கள் - காமராஜரை மனிதருள் மாணிக்கம், படிக்காத மேதை, என பல திறமையும் ஆளுமையையும் ஒருங்கே கொண்டவர்
நெல்லை கண்ணன் காமராஜரைப் பற்றி பேசியதை கேளுங்களேன் https://www.youtube.com/watch?v=ICk3kO_YxBc
No comments:
Post a Comment